2012-01-16 13:25:31

கவிதைக் கனவுகள்.......... சுயநலம்


சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுயநலம் வளர்பிறை !
பொது நலம் தேய்பிறை !
சுயநலத்தின்
நிழல்தான் பொதுநலம் !
பொதுநலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கிக் கிடந்தது
சுயநலம் !
பொதுநலம் ஓர் ஆலமரம்
சுயநலம் விழுது !
தேர்தல் இலவசங்கள் சுயநலமா?
பொது நலமா?
“தானே” புயல் நிவாரணம் சுயநலமா?
பொதுநலமா?
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம், கட்டிய கோபுரம்! (நன்றி-சி. ஜெயபாரதன்)








All the contents on this site are copyrighted ©.