2012-01-13 15:47:48

காங்கோ சனநாயகக் குடியரசின் தேர்தல் முறைகேடுகளுக்கு ஆயர்கள் கண்டனம்


சன.13,2012. காங்கோ சனநாயகக் குடியரசில் இடம் பெற்ற அரசுத்தலைவர்க்கானத் தேர்தல், ஏமாற்றுவேலையும், பொய்யும், அச்சமும் நிறைந்ததாக இருந்தது என்று அந்நாட்டின் 35 ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.
அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இடம் பெற்ற “கடுமையானத் தவறுகள்” திருத்தப்படுமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
இந்தத் தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்த கின்ஷாசா பேராயர், ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தவும் கடந்த வாரத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே, ஆயர்கள் கண்டனம் தெரிவித்துள்ள இப்பொதுத் தேர்தல், பார்வையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கடுமையாய் விமர்சிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
500 நாடாளுமன்ற இடங்களுக்காகப் போட்டியிட்ட 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்கள், பரவலான தேர்தல் முறைகேடுகளால் பெரிதும் துன்புற்றனர் என்றும் அனைத்துலகப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.