2012-01-13 15:48:41

இஸ்பெயின் கிறிஸ்தவர்கள் குடியேற்றதாரரை வரவேற்க அந்நாட்டுக் கர்தினால் வலியுறுத்தல்


சன.13,2012. இஸ்பெயின் கிறிஸ்தவர்கள், தங்கள் நாட்டில் குடியேறும் வெளிநாட்டவரை வரவேற்று, அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதற்கு உதவுமாறு மத்ரித் பேராயர் கர்தினால் Antonio Maria Rouco Varela கேட்டுக் கொண்டுள்ளார்.
சனவரி 15ம் தேதி, இஞ்ஞாயிறன்று அனைத்துலக குடியேற்றதாரர் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் ரோக்கோ, கத்தோலிக்கர்கள், வேற்றுமை பாராது, ஒற்றுமையைக் கட்டி எழுப்புபவர்களாகச் செயல்படுமாறு கேட்டுள்ளார்.
குடியேற்றதாரர், தாங்கள் குடியேறும் புதிய நாடுகளில் கலாச்சாரத் தாக்கத்தை எதிர்நோக்குகிறார்கள் என்பதால், அவர்களின் துன்பங்கள், விசுவாச வாழ்வில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் மத்ரித் கர்தினால் ரோக்கோ.







All the contents on this site are copyrighted ©.