2012-01-07 13:56:40

எருசலேமில் காந்தி நினைவு மண்டபம்


சன.07,2012. அமைதியை உணர்த்தும் விதமாக எருசலேமில் மகாத்மா காந்திக்கு நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று சொல்லி, இதனை உணர்த்தும் விதமாக அவரின் உருவச்சிலையும், தியான மையமும் அமைக்க எருசலேம் மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
இந்த நினைவு மண்டபத்தை எங்கு நிறுவுவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், ஏதாவது ஓர் அரபு நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இந்நினைவு மண்டபத்தை வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி உருவச்சிலையை, ஜெனீவா மாநகராட்சி, எருசலேம் மாநகராட்சிக்குக் கொடையாக வழங்கவுள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.