2012-01-06 15:13:04

பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்கள்


சன.06,2012. இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்களின் பெயர்களை இவ்வெள்ளிக்கிழமை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர், வத்திக்கான் மாளிகையில் வழக்கமான ஜன்னல் வழியே நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, வருகிற பிப்ரவரி 18ம் தேதி புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு இடம் பெறும் எனவும் அறிவித்து அவர்களின் பெயர்களை மகிழ்வோடு அறிவிப்பதாகக் கூறி அவற்றை வெளியிட்டார்.
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் Fernando Filoni,
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நீதிமன்றத் தலைவர் பேராயர் Manuel Monteiro de Castro,
உரோம் மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு பேராயர் Santos Abril Y Castellò,
திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Veglio,
வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அவைத் தலைவரும் வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகியுமான பேராயர் Giuseppe Bertelli,
திருப்பீடச் சட்டப்பிரிவு அவைத் தலைவர் பேராயர் Francesco Coccopalmerio,
திருப்பீட துறவறத்தார் பேராயத் தலைவர் பேராயர் JOÃO Braz de Aviz,
எருசலேம் புனிதக் கல்லறை அமைப்புத் தலைவர் பேராயர் Edwin Frederik O'Brien, திருப்பீடச் சொத்து நிர்வாகத்துறைத் தலைவர் பேராயர் Domenico Calcagno,
திருப்பீடப் பொருளாதாரத்துறைத் தலைவர் பேராயர் Giuseppe Versaldi,
இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் GEORGE Alencherry,
கனடாவின் டொரோன்ட்டோ பேராயர் Thomas Christopher Collins,
செக் குடியரசின் பிராக் பேராயர் Dominik Duka,
நெதர்லாந்தின் Utrecht பேராயர் Willem Jacobus Eijk,
இத்தாலியின் பிளாரன்ஸ் பேராயர் Giuseppe Betori,
அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் Timothy Michael Dolan,
ஜெர்மனியின் பெர்லின் பேராயர் Rainer Maria Woelk,
சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் ஆயர் John Tong Hon
ஆகியோரைக் கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை.
மேலும், ஒரு திருஅவையின் தந்தையாகவும் மேய்ப்பராகவும் இருக்கும் ஒருவர் மற்றும் திருஅவையின் சேவையில் குறிப்பிடத்தக்கப் பணியாற்றிய மூன்று அருட்பணியாளர்களையும் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார் திருத்தந்தை.
ரொமேனியாவின் Făgăraş மற்றும் Alba Iulia பேராயரான முதுபெரும் தலைவர் Lucian Muresan,
லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்று முன்னாள் பேராசிரியர் Namur மறைமாவட்டத்தின் அருட்பணி Julien Ries,
பல்வேறு உரோம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அகுஸ்தீன் சபை அருள்தந்தை Prospero Grech,
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Karl Becker
ஆகியோரையும் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார் திருத்தந்தை.
மொத்தத்தில் 18 பேராயர்கள், ஓர் ஆயர் மற்றும் 3 அருட்பணியாளர்களை, கர்தினால் நிலைக்கு உயர்த்தியுள்ள திருத்தந்தை, இவர்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.
தற்போது கத்தோலிக்கத் திருஅவையின் கர்தினால்கள் அவையில் 192 பேர் உள்ளனர். புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற அவையில் அதிகபட்சம் 120 பேர் இருக்க வேண்டும். இவர்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.