2012-01-06 15:13:33

பல்சமயத் தலைவர்கள் : இலங்கையில் நிலைத்த அமைதி ஏற்படுவதற்கு, உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது அவசியம்


சன.06,2012. இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவுற்ற உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கை முன்வைத்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமாறு கத்தோலிக்கம் உள்ளிட்ட அந்நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் கிறிஸ்தவம், புத்தம், இசுலாமியம், இந்து ஆகிய மதங்களின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய நிருபர் கூட்டத்தில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் நிலைத்த அமைதி ஏற்படுவதற்கு, உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது இன்றியமையாதது என்று இத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய கத்தோலிக்க அருட்பணியாளர் மெர்வின் பெர்ணான்டோ, மக்களின் உண்மையான மனக்குறைகள் தீர்க்கப்படுவதற்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது என்பதைக் குறிப்பிட்டார்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய புத்தமதக் குரு Bellanvila Wimalarathana Thero, மீண்டும் ஓர் இனச்சண்டை ஏற்படாமல் இருப்பதற்கு அந்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது அவசியம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.