2012-01-02 15:00:42

தென் சூடானில் அமைதி காப்புத்துருப்புகளை நிறுத்துதியுள்ளது ஐநா அமைப்பு


சன 02, 2011. தென் சூடானில் ஆயுதம் ஏந்திய கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் Pibor நகர் மக்களைக் காப்பாற்ற அமைதிகாப்புத் துருப்புகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அமைப்பு.
இந்நகரில் இரு பழங்குடி இனங்களிடையே இடம்பெறும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய ஏறத்தாழ 6,000 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக உரைத்த தென் சூடானுக்கான மனிதாபிமானப்பணிகளின் ஐ.நா. துணை ஒருங்கிணைப்பாளர் லிசே கிராந்தே, பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாகவும் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்தார்.
வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், மக்களைக் காப்பாற்றுவதில் அரசுக்கு உதவவும் ஐ.நா. துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கிராந்தே.








All the contents on this site are copyrighted ©.