2012-01-02 14:56:35

கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிற கிறிஸ்தவ சபையினருக்கென புதிய அமைப்பு


சன 02, 2011. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆங்கிலிக்கன் மற்றும் எப்பிஸ்கோபல் கிறிஸ்தவ சபையினருக்கு உதவுவதற்கென மறைமாவட்டத்தையொத்த ஓர் அமைப்பு முறையை இஞ்ஞாயிறன்று உருவாக்கியுள்ளது திருப்பீடம்.
எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஆயர், குரு Jeffrey Neil Steensonஐ அவ்வமைப்பினை வழிநடத்துபவராகவும் அறிவித்ததிருப்பீடம், இவ்வமைப்பு டெக்சஸ் மாநிலத்திலிருந்து செயல்பட்டாலும், தேசியஅளவில் அதிகாரத்தைக் கொண்டுள்ளதாகஇருக்கும் எனவும் தெரிவித்தது.
கடந்தஆண்டு இத்தகையஓர் அமைப்பு முறையை இங்கிலாந்தில் உருவாக்கியதிருப்பீடம், தற்போது அமெரிக்கஐக்கியநாட்டிலும் இத்தகையஓர் அமைப்பை உருவாக்கியுள்ளதன் மூலம் ஆங்கிலிக்கன் மற்றும் எப்போபிஸ்கோப்பல் கிறிஸ்தவசபைகளிலிருந்து கத்தோலிக்கத்தில் சேரவிரும்புபவர்களுக்கு வழி அமைத்துள்ளது.
தற்போது இவ்வமைப்பை வழிநடத்துபவராகதிருப்பீடத்தால் நியமிக்கப்பட்டுள்ளகுரு Neil Steenson, 2007ம் ஆண்டுவரை எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ சபையில் ஆயராகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்தார். திருமணம் புரிந்து 3 குழந்தைகளுக்குத் தந்தையான இவர், 2009ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.