2012-01-02 15:03:23

2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு


சன 02, 2011. இந்தியாவில் வேலை தேடுவோருக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் எனவும், புதிதாக ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பொருளாதாரச் சூழ்நிலை மோசமாக இருந்ததாலும், நிலையற்றதன்மை நிலவியதாலும், இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில், கடந்த ஆண்டில், சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது எனக் கூறும் இந்திய நிபுணர்கள், இந்த ஆண்டில் வேலை வாய்ப்புகள் உருவாவது தொடரும் எனவும், 2012ம் ஆண்டில் புதிதாக ஐந்து இலட்சம் ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்குச் சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைகளில் மட்டும் இந்த ஆண்டில் மூன்று இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.