2011-12-29 14:52:04

தென் கொரியாவில் Salvation Army மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை


டிச.29,2011. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி தென் கொரியாவில் Salvation Army எனப்படும் பிறரன்பு அமைப்பு மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை திரட்டப்பட்டது.
டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்து கிறிஸ்மஸ் விழா வரை 300 இடங்களில் திரட்டப்பட்ட தொகை, 473 கோடி won, அதாவது, ஏறத்தாழ 41 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ளது.
45,000 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்த இந்த நிதித் திரட்டும் முயற்சியின் வழி கிடைத்த தொகையைக் கொண்டு மிகவும் வறுமையில் உள்ளோரின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று Salvation Armyன் சார்பாகப் பேசிய Chung Mi-sun கூறினார்.
2009ம் ஆண்டு இறையடி சேர்ந்த கர்தினால் Stephen Kim Sou-hwan தன் மரணத்திற்கு முன் கண்களைத் தானம் செய்த நிகழ்ச்சி, கொடுக்க வேண்டும் என்ற ஆவலை தென் கோரிய கத்தோலிக்க மக்களிடையே அதிகரித்துள்ளது என்று Mi-sun மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.