2011-12-28 15:53:47

இலண்டன் நகரில் கிறிஸ்மஸ் காலத்தில் வீணாக்கப்படும் காகிதங்களைக் கொண்டு 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும்


டிச.28,2011. கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் சுற்றப்படும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்படும் எரிசக்தியைப் பயன்படுத்தி இருதளம் கொண்ட பேருந்து ஒன்று பூமியிலிருந்து நிலவுக்கு 20 முறை பயணங்கள் மேற்கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
லண்டன் நகரில் உள்ள Imperial College என்ற கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் அனைத்தையும் பயோ எரிசக்தியாக மாற்றினால் அது ஒரு மாற்று எரிசக்தியாகப் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் காலத்தில் பிரித்தானியாவில் வாழும் மக்கள் 150 கோடி வாழ்த்து அட்டைகளையும், 83 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள பரிசுப் பொருள் சுற்றும் காகிதங்களையும் பயன்படுத்தி வீசி எறிவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படும் இக்காகிதங்களை bio எரிசக்தியாக மாற்றினால் 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.