2011-12-27 13:35:28

அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்கிறார் அபுஜா பேராயர்


டிச.27,2011. அண்மை வெடிகுண்டு தாக்குதலகள், நிலையற்றதன்மைகளின் ஆபத்தை வெளிப்படுத்தி நிற்கின்ற போதிலும், அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி நிற்கின்றன என்றார் நைஜீரியாவின் அபுஜா பேராயர்.
நைஜீரியாவின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அமைதியில் ஒன்றிணைந்து வாழ ஆவல் கொண்டுள்ள வேளையில், ஒன்றிணைந்து வாழும் முயற்சிகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகின்றது என வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய அபுஜா பேராயர் John Olorunfemi Onayekan, இத்தாக்குதலில் சிலஇஸ்லாமியர்களும் உயிரிழந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஒரே குடும்பஉணர்வுடன் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து வாழும் நைஜீரியாவில் இத்தகையதாக்குதல் சம்பவங்கள், இரு மதத்தினருக்கும் இடையேயானபகைமைக்கு வித்திடுமானால் அதன் விளைவுகள் மிகுந்ததீமை நிறைந்ததாகஇருக்கும் என்றகவலையையும் வெளியிட்டார் பேராயர் Onayekan.








All the contents on this site are copyrighted ©.