2011-12-24 12:31:02

டிசம்பர் 25, வாழ்ந்தவர் வழியில்.....


நேயர்களே! இவ்வாண்டின் முதல் நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தவர் வழியில் எனும் நிகழ்ச்சியில் அந்த தேதியில் பிறந்த அல்லது இறந்த சான்றோர்களின் வாழ்வுக் குறிப்புகளைப் பகிர்ந்து வருகின்றோம். டிசம்பர் 25ம் தேதி என்றால் அது நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாள். வத்திக்கான் வானொலியின் அன்புள்ளங்களுக்கு அவர் வாழ்வு மற்றும் போதனைக் குறித்து அதிகம் அதிகமாகவேத் தெரியும். வரலாற்றையே மாற்றி அமைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இந்த தேதியில் பிறந்த மற்றும் இறந்த சில சான்றோர்களின் பெயர்களை இன்று எண்ணிப் பார்ப்போம்.
1642ம் ஆண்டில் ஆங்கில இயற்பியலாளர் ஐசக் நியூட்டன்,
1876ல் பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னா,
1918ல் எகிப்திய தலைவர் அன்வர் சதாத்,
1924ல் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்,
1949ல் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
என புகழ்பெற்றோர் பலர் இதே டிசம்பர் 25ம் தேதி பிறந்தவர்கள்.
ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் 1796லும்,
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் 1977லும்,
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் 1994லும்
டிசம்பர் 25ம் தேதி காலமானார்கள்.








All the contents on this site are copyrighted ©.