2011-12-21 15:39:16

உலகின் வறுமையை ஒழிக்க அமெரிக்க பாராளுமன்றம் எடுத்த முடிவுக்கு பாராட்டு


டிச.21,2011. உலகின் வறுமையை ஒழிக்க வழங்கப்படும் அமெரிக்க நிதியுதவியை 3 விழுக்காடு அதிகப்படியாக அளிக்க அநாட்டு பாராளுமன்றம் அண்மையில் எடுத்த முடிவை வரவேற்று, அமெரிக்க ஆயர் பேரவையும், CRS என்ற கத்தோலிக்கத் துயர்துடைப்பு சேவை அமைப்பும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.
உலகின் பல நாடுகளில் பல்லாயிரம் உயிர்களைக் காக்கும் முயற்சிகளுக்கு இந்நிதி உதவும் என்பதால் இந்த முடிவைத் தாங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் வரவேற்றுள்ளனர் என்று CRS அமைப்பு தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை வேளாண்மை, குடிநீர், மற்றும் பல நலவாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படும் இந்த நிதி, பல்வேறு இயற்கைப் பேரிடர்கள், மற்றும் அரசியல் போராட்டங்களால் நாடு விட்டு நாடு புலம்பெயரும் மக்களுக்கும் பெருமளவு பயனளிக்கும் என்று CRSன் இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.