2011-12-19 15:50:18

வட கொரிய அரசுத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, வட, தென் கொரிய நாடுகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன - கொரிய ஆயர் பேரவையின் தலைவர்


டிச.19,2011. வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-ilன் மரணம் வடகொரியாவில் உறுதியற்ற ஒரு அரசியல் நிலையை உருவாக்கக்கூடும் என்றாலும், இந்த மரணத்தைத் தொடர்ந்து, வட, தென் கொரிய நாடுகள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தான் நம்புவதாக கொரிய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-il கடந்த சனிக்கிழமை மரணமடைந்ததாக இத்திங்களன்று வெளியான செய்தியினைத் தொடர்ந்து, கொரிய ஆயர்கள் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் அரசுத் தலைவரின் மரணம் இரு கொரிய நாடுகளின் வரலாற்றையும் மாற்றும் என்று கூறினார்.
வட கொரிய அரசுத்தலைவர் Kim Jong-il மரணத்தைத் தொடர்ந்து அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரது முப்பது வயது மகன் Kim Jong-unஐக் குறித்து அதிகம் தகவல்கள் இல்லை என்றும், இரு கொரிய நாடுகள் இடையிலும் ஒப்புரவை வளர்க்க புதிய அரசுத் தலைவர் முயற்சிகள் எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் ஆயர் Peter Kang கூறினார்.








All the contents on this site are copyrighted ©.