2011-12-19 15:49:16

புனிதர்பட்ட நிலைகளுக்கு 83 இறையடியார்களின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன


டிச.19,2011. திருச்சபையில் புனிதர்பட்ட நிலைகளுக்கான படிகளுக்கு 83 இறையடியார்களின் பெயர்கள் இத்திங்கள் காலை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இத்தாலியைச் சேர்ந்த அருளாளர் Giovanni Battista Piamarta, பிரான்சின் இயேசுசபை மறைசாட்சி அருளாளர் Giacomo Berthieu, இஸ்பெயினின் அருளாளர் Maria del Monte Carmelo, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அருளாளர் Caterina Tekakwitha, பிலிப்பீன்சின் மறைசாட்சி அருளாளர் Pietro Calungsod, ஜெர்மனியின் அருளாளர்கள் மரியன்னா மற்றும் Anna Schäffer, ஆகியோரிடம் வேண்டியதால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விவரங்கள் திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்கப்பட்டன.
மேலும், வணக்கத்துக்குரிய இறையடியார்கள் பிரான்சின் Luigi Brisson மற்றும் Maria Luisa Elisabetta, இத்தாலியின் Luigi Novarese மற்றும் Maria Luisa, அர்ஜென்டினாவின் Maria Crescenzia, ஆகியோரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் குறித்த விவரங்களும், மறைசாட்சியாக உயிர் துறந்த இறையடியார்கள் சுவிட்சர்லாந்தின் Nicola Rusca, இஸ்பெயினின் Luigi Orenzio வுடன் 18 உடனுழைப்பாளர்கள், Alberto Maria Marco y Alemánவுடன் 8 உடனுழைப்பாளர்கள், அகஸ்தீனோ மரிய கார்ஸியா திரிபால்தோஸுடன் 15 உடனுழைப்பாளர்கள், Mariano Alcalá Pérezவுடன் 18 உடனுழைப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் புனிதர் பட்ட நிலைக்கான அடுத்த படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இது தவிர, தங்கள் வீரம் மிகுந்த விசுவாசத்திற்கென இறையடியார்கள் என வணங்கப்படும் இத்தாலியின் Maria Anna Amico Roxas, Donato Giannotti மற்றும் Assunta Marchetti, பிரான்சின் Maria Eugenio del Bambino Gesù மற்றும் Alfonsa Maria, உக்ரைனின் Margherita Lucia Szewczyk, ஜெர்மனியின் Maria Julitta ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.