2011-12-16 15:30:41

ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர், திருப்பீடத் தூதர் சந்திப்பு


டிச.16,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் Alassane Ouattara ஐ இவ்வெள்ளியன்று சந்தித்து திருத்தந்தையின் செய்தியை வழங்கியுள்ளார் அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha.
சுமார் நாற்பது நிமிடங்கள் இடம் பெற்ற இச்சந்திப்பின் போது, அந்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Madtha.
இக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பங்களோடு கிறிஸ்மஸைக் கொண்டாட முடியும் என்றும் பேராயர் கூறினார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஐவரி கோஸ்ட் பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் திருப்பீட அதிகாரியிடம் தெரிவித்தார் அரசுத் தலைவர் Alassane Ouattara.








All the contents on this site are copyrighted ©.