2011-12-13 15:20:31

திருப்பீட வெளியுறவுத் துறை சிலே நாட்டில் சுற்றுப் பயணம்


டிச.13,2011. திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி சிலே நாட்டு அரசுத்தலைவர் Sebastain Pinero உட்பட அந்நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரிகளைச் சந்தித்து திருப்பீடத்துக்கும் சிலே நாட்டுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்து கலந்து பேசினார் என்று திருப்பீடம் அறிவித்தது.
சிலே நாட்டின் பொது வாழ்வுக்கு, குறிப்பாக கல்வி, நலவாழ்வு, சமூக வாழ்வு மற்றும் பூர்வீக இன மக்கள் சமூகத்தோடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை செய்து வரும் பணிகள் இக்கலந்துரையாடலில் பாராட்டைப் பெற்றன என்றும் அறிவிக்கப்பட்டது.
குடும்பப் பாதுகாப்பு, மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம், மற்றும் மதச் சுதந்திரப் பாதுகாப்புக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்து வரும் முயற்சிகளை சிலே அரசுத்தலைவர் Sebastain Pinero இச்சந்திப்பில் பாராட்டினார் என்றும் கூறப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.