2011-12-13 15:26:20

சீனாவில் ஆண்டு தோறும் சுமார் நான்காயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது


டிச.13,2011. சீன அரசு ஒவ்வோர் ஆண்டும் சுமார் நான்காயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றுகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு ஒன்று கூறியது.
San Franciscoவை மையமாகக் கொண்டு இயங்கும் Dui Hua அமைப்பு, உலகிலே அதிகமான எண்ணிக்கையில் மரணதண்டனையை நிறைவேற்றும் நாடாக சீனா இருக்கின்றது என்றும், உண்மையான எண்ணிக்கையை சீன அதிகாரிகள் வெளியிட மறுக்கின்றனர் என்றும் கூறியது.
எனினும், மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை 2007ம் ஆண்டுக்குப் பின்னர் 50 விழுக்காடு குறைந்துள்ளது என்று சீன அரசு கூறியதாக அவ்வமைப்பு கூறியது.
2006ம் ஆண்டில் சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி ஆண்டுக்கு எட்டாயிரம் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்று Dui Hua அமைப்பு தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.