2011-12-13 15:23:22

இந்தோனேசியாவில் சமூக அநீதிகளைக் களைவதற்கு மேய்ப்புப்பணியாளர்களுக்கு ஆயர் ஆதரவு


டிச.13,2011. இந்தோனேசியாவில் சமூக அநீதிகளைக் களைவதற்கு மேய்ப்புப்பணியாளர்கள் எடுத்துவரும் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது என்று அந்நாட்டு இயேசு சபை ஆயர் ஒருவர் கூறினார்.
மத்திய ஜாவா மேய்ப்புப்பணியாளர்களிடம் இவ்வாறு கூறிய Purwokerto ஆயர் Julianus Sunarka, இறையாட்சியை அறிவிக்கும் அவர்களது பணியில், அவர்கள், புத்த, இந்து, இசுலாம் கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபை என அநீதிகளை எதிர்நோக்கும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்தோனேசிய காரித்தாஸ் நடத்திய பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்ட சுமார் 90 மேய்ப்புப்பணியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்த ஆயர் Sunarka, அநீதிகளைச் சந்திக்கும் மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து தீர ஆலோசிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, இந்தோனேசியாவில் மனித வியாபாரமும் வீடுகளில் இடம் பெறும் வன்முறையும் அதிகரித்து வருவதாக காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி Stephanus Budhi Prayitno தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.