2011-12-12 14:59:34

இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்கிறார் அனுராதபுர ஆயர்


டிச.12,2011. இலங்கையில் பணிபுரியும் அன்னை தெரேசா பிறரன்புச் சபை சகோதரிகளுக்கு எதிரான அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டித்து, இவ்வாண்டில் அரசு ஏற்பாடு செய்யும் எந்த விதமான கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார் அந்நாட்டின் அனுராதபுர ஆயர் நார்பர்ட் அந்த்ராடி.
பிறரன்புச் சபை சகோதரிகள் குழந்தைகளைக் கடத்த உதவினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் இந்த வியாழனன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது குறித்து ஏற்கனவே தன் கண்டனத்தை வெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித், எவ்வித அரசு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனுராதபுர ஆயர் அந்த்ராடியும் அரசு ஏற்பாடு செய்யும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.