2011-12-10 14:54:39

கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனைத் தீ விபத்துச் சம்பவம், வெறுமனே மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமே உரிய நிகழ்வாகக் கருதப்படக் கூடாது


டிச.10,2011. கொல்கத்தா நகரில் ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனைத் தீ விபத்தில் 89 பேர் இறந்துள்ள துயரச் சம்பவம், வெறுமனே மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமே உரிய நிகழ்வாகக் கருதப்படாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளதாக ஊடகவியலார் ஒருவர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, ஓர் ஆங்கில வார இதழும் ஒரு தனியார் அமைப்பும் இணைந்து சிறந்த இந்திய மருத்துவமனைகளைத் தரவரிசைப்படுத்தின. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது அட்வான்ஸ்டு மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஹாஸ்பிடல் என்கிற ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனை என்று அவர் கூறினார்.
இத்தகைய ஒரு மருத்துவமனையிலேயே தீ விபத்து நடக்கும் வாய்ப்புகள் இருப்பதும், அத்தகைய நேரங்களில் நோயாளிகளும் அவர்களுடன் இருப்போரும் வெளியேற வழியின்றி இறப்பதும் சாத்தியம் என்று சொன்னால், மற்ற சாதாரண மருத்துவமனைக் கட்டடங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் மருத்துவக் கழிவுப்பொருள் சேமிப்புக் கிடங்கு இருந்ததாகவும் அதிலிருந்து வெளிப்பட்ட தீயே மருத்துவமனையின் மேல் தளங்களுக்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.