2011-12-09 15:13:51

கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் அனைத்துலக நாள் உருவாக்கப்படுவதற்குச் சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்பு


டிச.09,2011. “கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் அனைத்துலக நாள்” உருவாக்கப்பட வேண்டுமென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருப்பதைச் சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
திருப்பீட வெளியுறவு அமைச்சகச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி இத்தகைய அனைத்துலக நாள் அவசியம் என்று, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவன அமைச்சர்கள் கூட்டத்தில் அண்மையில் முன்வைத்த பரிந்துரையை சமய சுதந்திர ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
விலங்குகள் உரிமைகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், பெண்களுக்குச் சமத்துவம், இன-கலாச்சாரப் பன்மைத்தன்மையை மதித்தல் போன்ற பல உரிமைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர் என்றுரைத்த Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் Neville Kyrke-Smith, கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விவகாரம் எழும் போது மட்டும் அது மௌனப்படுத்தப்படுகின்றது என்று குறை கூறினார்.
உலகிலுள்ள 20 கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், சட்ட மற்றும் கலாச்சார அமைப்புக்களால் துன்புறுகின்றனர் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.