2011-12-08 14:13:24

காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு உறுப்பு நாடுகளுக்கு பான் கி மூன் அழைப்பு


டிச.08,2011. காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் முயற்சிகளுக்கு அந்நிறுவனத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களது ஆதரவை வழங்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன், காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் காடுகள் அழிவதைக் குறைப்பதற்கும், அதேசமயம் இந்நாடுகளின் இம்முயற்சிகளுக்கு பிற நாடுகள் உதவி செய்ய உறுதி கூறுவதையும் பார்ப்பது ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று கூறினார்.
எனினும், உலகில் காடுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அழிந்து வருகின்றன என்றும் இதனைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் பான் கி மூன் தெரிவித்தார்.
இதற்கிடையே, வெப்பநிலை உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு உதவுவதற்குப் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வீதம் 2020ம் ஆண்டுக்குள் உதவி செய்வதற்கு இந்தக் கருத்தரங்கில் உறுதி அளித்திருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்தியா உட்பட பல நாடுகள் பங்கு கொள்ளும் இந்தக் கருத்தரங்கு இவ்வெள்ளிக்கிழமை நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.