2011-12-05 14:48:09

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களை பலிவாங்கிய Nato தாக்குதலுக்கு தலத்திருச்சபை கண்டனம்


டிச.05,2011. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தான் எல்லையில் 24 இராணுவ வீரர்களை பலிவாங்கிய Nato தாக்குதல் குறித்த தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டு எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை பாகிஸ்தான் தலத்திருச்சபை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ ஆதரவு அட்டைகளையும் தேசியக் கொடிகளையும் தாங்கியவர்களாய் அந்நாட்டின் இரு குருக்கள், 10 துறவிகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று கராச்சியின் பத்திரிகைத்துறை அலுவலகத்தில் கூடி Nato துருப்புகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டது.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பங்கு பெற்றோர், நாட்டின் சுயாட்சிக்கு எதிரான Natoவின் தாக்குதல் குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வழிவகைச் செய்யப்படுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.