2011-12-03 15:36:50

புனித பூமியில் இடம்பெறும் மோதல்கள் அரசியல் மற்றும் நிலப்பிரிவினைத் தொடர்புடையவைகளே


டிச.03,2011. புனித பூமியில் இடம்பெறும் மோதல்கள் அரசியல் மற்றும் நிலப்பிரிவினைத் தொடர்புடையவைகளே அன்றி, அவை, மதங்களோடு தொடர்புடையவை அல்ல என்றார் எருசலேமில் உள்ள காரித்தாஸ் பொதுச்செயலர் Claudette Habesch.
இன்று புனித பூமியில் இடம்பெறும் முரண்பாட்டுச் சூழல்களில் யார் வெற்றி பெறுவது யார் தோற்பது என்ற கேள்வியேயில்லை, மாறாக வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இருவரும் சேர்ந்தே அதனைப் பெறுவர் என்ற சூழலே உள்ளது என்றார் காரித்தாஸ் அதிகாரி.
பாலஸ்தானியர்களுக்கு எதிராக யூதர்கள் என்ற மதப்பிரச்சனை அங்கு இல்லை, மாறாக அங்கு இடம்பெறுவதெல்லாம் அரசியல் பிரச்சனையும் நிலம் தொடர்புடையவைகளுமே என உரைத்தார் Habesch.
பாலஸ்தீனியப்பகுதியிலிருந்து பெருமளவில் இளைய தலைமுறையினர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது கவலை தருவதாக உள்ளது எனவும் உரைத்த அவர், சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் ஒப்புரவில் நம்பிக்கைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், இத்தகையச் சூழல்களில் நம்பிக்கையின் கருவியாக இருந்து சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.