2011-11-30 15:53:37

நற்செய்தியின் பணிக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி வல்சா ஜான் போற்றுதற்குரியவர் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்


நவ.30,2011. தன் வாழ்வை நற்செய்தியின் பணிக்கென துணிவுடன் அர்ப்பணித்த அருள்சகோதரி வல்சா ஜான் போற்றுதற்குரியவர் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
நவம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அருள்சகோதரி வல்சா ஜானைக் குறித்து Aid to the Church in Need என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
அருள் சகோதரி கொலை வழக்கு குறித்து காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும் கர்தினால் கிரேசியஸ் குறிப்பிட்டார்.
அருள் சகோதரி வெட்டிக் கொல்லப்பட்டதைக் குறித்து பல்வேறு சமதாய அமைப்புக்கள் தங்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
மக்களின் நீதி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தொண்டர்களில் அருள்சகோதரி வல்சா ஜான் உட்பட இதுவரை இந்தியாவில் நான்கு பேரின் கொலைகள் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாக உள்ளன என்று பன்னாட்டுப் பொது மன்னிப்பு நிறுவனமான Amnesty International கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.