நீர் குறித்த மும்பை சர்வதேச கருத்தரங்கில் திருப்பீடப் பிரதிநிதி
நவ.29,2011. தண்ணீர் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு கடந்த வார இறுதியில் கர்தினால்
பால் போப்பார்டின் பங்கேற்புடன் மும்பை புனித ஆன்ட்ரூ கல்லூரியில் இடம் பெற்றது. கர்தினாலின்
தலைமையில் 'தண்ணீர்: அமைதி மற்றும் இணக்க வாழ்வை முன்னேற்றுவதில் விவகாரங்களும் சவால்களும்'
என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அறிவியலாளர் நிரஞ்சன் பில்ஜி மற்றும் மகராஷ்ட்ராவின்
முன்னாள் தலைமைச் செயலர் சங்கரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அமைதி
மற்றும் இணக்க வாழ்வை ஊக்குவிப்பதிலும் நல ஆதரவிலும் தண்ணீரின் பங்கு குறித்து இக்கருத்தரங்கில்
விவாதிக்கப்பட்டது.