2011-11-29 14:02:56

உலகின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்


நவ.29,2011. உலகின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள், மனிதனின் தவறான நடவடிக்கைகளால் வெகுவேகமாக இடம்பெறுவதை மனதிற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.
தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இத்திங்கள் முதல் டிசம்பர் 9ம் தேதி வரை இடம்பெறும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த ஐ.நா.வின் 17வது மாநாட்டையொட்டி சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், எதிர்மறை தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்குக் காரணமான வாயுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள பணக்கார நாடுகள், அப்பாதிப்புகளை ஈடு செய்ய முன்வருவதோடு, பாதிப்பற்ற வழிகளைச் செயல்படுத்த வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.
பாதிப்புதரும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த 1997ன் Kyoto ஒப்பந்தம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அனைவராலும் கட்டாயமாக கடைபிடிக்கப்படும் ஓர் ஒப்பந்தமாக மாற்றப்படவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.