2011-11-24 14:40:46

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த குழு திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.24,2011. கிறிஸ்தவம் பரவியுள்ள கீழ்த்திசை நாடுகளையும் மேற்கத்திய நாடுகளையும் இணைக்கும் பாலமாக Krizevci என்ற கிரேக்க கத்தோலிக்க மறைமாவட்டம் அமையட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைகள் உரோமை கத்தோலிக்கத் திருச்சபையுடன் உறவுகளைப் புதிப்பித்த 400வது ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், இப்புதனன்று திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொண்ட அப்பகுதி மக்களை வாழ்த்துகையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் CCEE என்றழைக்கப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த குழு 40வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையொட்டி, இக்குழுவில் உள்ள அங்கத்தினர்களைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.
உரோமைய மற்றும் ஆர்த்தடாக்ஸ் ரீதிகளைச் சார்ந்த 33 ஆயர் பேரவைகளை ஒருங்கிணைக்கும் இக்குழுவினரைத் திருத்தந்தை சந்தித்தது, இவ்விரு ரீதிகள் மட்டில் திருத்தந்தைக்கு உள்ள மதிப்பை வெளிப்படுத்துகிறது என்று CCEE தலைவரான கர்தினால் Péter Erdő கூறினார்.








All the contents on this site are copyrighted ©.