2011-11-21 15:45:02

பெத்லகேம் நகரை உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க பிரான்சிஸ்கன் துறவியர் தயக்கம்


நவ 21, 2011. பாலஸ்தீனிய நகர் பெத்லகேமை உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க முயலும் யுனெஸ்கோ அமைப்பின் திட்டம் குறித்து தங்கள் தயக்கத்தை வெளியிட்டுள்ளனர் அப்பகுதியின் பொறுப்பாளர்களாகச் செயல்படும் பிரான்சிஸ்கன் துறவுச் சபையினர்.
திருத்தலங்கள் என்பவை சுற்றுலாத் தலங்கள் அல்ல, மாறாக செபம் மற்றும் வழிபாட்டின் இடங்கள் என்று கூறும் பிரான்சிஸ்கன் துறவியர், இத்திருத்தலங்கள் உலகப் பாரம்பரியச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம், தேசிய உடமைகளாக அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.
யுனெஸ்கோ நிறுவனத்தால் ஒரு திருத்தலம் உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கப்படும்போது, அது அரசு நிர்வாகத்தின் கீழே கொணரப்படும் எனவும் கூறினர் பிரான்சிஸ்கன் துறவியர்.
இத்தகைய ஒரு சூழலில், அரசு நிர்வாகத்தின் கீழ் திருத்தலங்கள், அரசியல் ஆதயாயங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடியஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர் அவர்கள்.
இதற்கிடையே, பெத்லகேம் நகரை, உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கக் கேட்கும் விண்ணப்பத்தை கடந்த ஆண்டே யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார் பாலஸ்தீனியசுற்றுலாத்துறை அமைச்சர் Khouloud Daibes Abu Dayyeh.








All the contents on this site are copyrighted ©.