2011-11-18 16:12:44

லைபீரியத் தேர்தல் தொடர்பான வன்முறைப் பரிசீலனைக் குழுவுக்கு ஓர் அருட்சகோதரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்


நவ.18,2011. லைபீரிய நாட்டில் அண்மையில் இடம் பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு ஓர் அருள்சகோதரியைத் தலைவராக நியமித்துள்ளார்.அந்நாட்டு அரசுத்தலைவர் எல்லன் ஜான்சன்.
இக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரான்சிஸ்கன் அருள்சகோதரி Mary Laurene Browne, லைபீரியாவின் உள்நாட்டுப் போரின் பல்வேறு விதமான நிலைகளை நன்கு அறிந்தவர் என்றும் அந்நாட்டின் வரலாறு பற்றி ஆழமான அறிவைக் கொண்டுள்ளவர் என்றும் ஒரு மறைபோதகக் குரு Mauro Armanino தெரிவித்தார்.
லைபீரியாவைக் கட்டி எழுப்புவதில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கை அங்கீகரிப்பதாகவும் இந்த நியமனம் இருக்கின்றது என்றும் அக்குரு கூறினார்.
1989ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையும், 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையும் லைபீரியா, இரண்டு உள்நாட்டுப் போர்களை அனுபவித்துள்ளது.
லைபீரிய அரசுத்தலைவர் எல்லன் ஜான்சன், 2011ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.