2011-11-18 16:12:05

தற்கொலைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கேரள தலத்திருச்சபை வரவேற்பு


நவ.18,2011. கேரளாவில் விவசாயிகள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசம் கொடுத்திருப்பது உட்பட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடை செய்வதற்கு அம்மாநில அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை.
Wayanad மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் பெரும் கடன் சுமை காரணமாக ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துள்ள வேளை, விவசாயிகள் குறித்த அரசின் இப்புதிய நடவடிக்கைகள் நல்லதொரு தொடக்கம் என்று Mananthavady மறைமாவட்டப் பேச்சாளர் அருட்பணி Thomas Therakam கூறினார்.
கேரள முதலமைச்சர் Oomen Chandy இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அரசுத் துறைகள், பிற அரசு நிறுவனங்களிடமிருந்து வேளாண்மைக்கென கடன் பெற்ற விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் காட்டு விலங்குகளால் சேதமாக்கப்பட்ட அறுவடைகளுக்கு நல்ல இழப்பீட்டுத் தொகையும் வழங்குவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள அரசின் இவ்வறிப்பைப் பாராட்டியுள்ள அருட்பணி Therakam, அறுவடை காப்பீடு முறையைத் தொடங்குவதற்கும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் பரவலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.