2011-11-18 16:13:25

தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் வேளாண் துறையில் புதிய முறைகள் கையாளப்பட வேண்டும் - FAO


நவ.18,2011. வருங்காலத்தில் தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் தற்போதைய வேளாண் துறையில் புதிய முறைகள் கையாளப்பட வேண்டும் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கேட்டுக் கொண்டது.
குறுநில விவசாயிகளைப் பாதுகாக்கவும் கிராமங்களில் நிலையான வளர்ச்சி ஏற்படவும் ஒருங்கிணைந்த திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டுமென்றும் FAO நிறுவனம் வலியுறுத்தியது.
நாளையப் பசுமைப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருப்பது வேளாண்மையே என்றுரைத்த FAOவின் இயற்கை வளங்களுக்கான உதவி இயக்குனர் Alexander Mueller, வேளாண்மையில் கற்பனை திறத்துடன் புதுமைகள் புகுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
2050ம் ஆண்டில் தொள்ளாயிரம் கோடியாக உயரவுள்ள மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு உணவு உற்பத்தி 70 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று FAO கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.