2011-11-17 15:13:35

கனடாவில் வாழும் கத்தோலிக்கர்கள் தங்கள் சமய உரிமைகளைக் காத்துக்கொள்வதில் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் - Vancouver பேராயர்


நவ.17,2011. அரசியலுக்கும் மதங்களுக்கும் இடையே சுமுகமான உறவுகள் கனடா நாட்டில் நிலவி வந்தாலும், அந்நாட்டு கத்தோலிக்கர்கள் தங்கள் சமய உரிமைகளைக் காத்துக்கொள்வதில் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று Vancouver பேராயர் Michael Miller கூறினார்.
மத உரிமைகளைத் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கள் என்றும், ஒருவரது தனி கருத்து என்றும் குறுக்கி விடுவது ஆபத்தான போக்கு என்று பேராயர் Miller எச்சரித்தார்.
கத்தோலிக்கப் படிப்பினைகளுக்கு எதிரான கொள்கைகளைப் பள்ளிப் பாடங்களில் புகுத்துவது; தங்கள் மத கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசு அதிகாரிகள் ஒரே பாலினத் திருமணங்களை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவது; பெண்களை கருகலைப்பு செய்து கொள்வதற்கு நலத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் ஆலோசனை தர வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற அரசின் ஒரு சில புதிய போக்குகளைச் சுட்டிக்காட்டிய பேராயர் Miller இவைகளெல்லாம் கத்தோலிக்கர்களின் அடிப்படை மத உரிமைகளைப் பாதிக்கும் வழிகள் என்று கூறினார்.
மத உரிமைகளும், மனச்சான்றின் உரிமைகளும் கடவுளிடமிருந்து வருபவை என்றும், இவைகளை வழங்கவோ எடுத்துக் கொள்ளவோ அரசுகளுக்கு உரிமையில்லை என்றும் பேராயர் Miller வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.