2011-11-15 14:32:48

இந்தோனேசிய சமய சகிப்புத்தன்மை மசோதா பல்சமய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் : தலத்திருச்சபை உயர் அதிகாரி குறை


நவ.15,2011. இந்தோனேசியாவில் பிரதிநிதிகள் அவையால் தயாரிக்கப்பட்டுள்ள சமய சகிப்புத்தன்மை மசோதா பல்சமய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இது இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தலத்திருச்சபை உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
சமய விழாக்கள், மறையுரைகள், இறந்தோர் அடக்கம், வழிபாட்டுத்தலங்களைக் கட்டுதல் போன்ற அடிப்படை விவகாரங்கள் மீது விதிமுறைகளை வைப்பதால் இம்மசோதா பல்சமய நல்லிணக்கத்தை வெகுவாய்ப் பாதிக்கும் என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் பல்சமய ஆணைக்குழுச் செயலர் அருட்பணி Antonius Benny Susetyo கூறினார்.
இம்மசோதாவின்படி, மக்கள் தங்கள் மதப் போதனைகளின் அடிப்படையில் மதக் கொண்டாட்டங்களை நடத்தலாம், அத்துடன் அந்தக் கொண்டாட்டங்கள் அந்த மத மக்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிகிறது.
இதனால் பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட மக்களுக்கிடையே நல்ல உறவுகளைக் கட்டி எழுப்புவது கடினம் என்று அருட்பணி Susetyo மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.