2011-11-11 15:30:20

பிலிப்பைன்சில் 2012ம் ஆண்டில் 19வது பன்னாட்டுத் திருச்சபைத் தலைவர்கள் கருத்தரங்கு


நவ.11,2011. வருகிற ஆண்டில் பிலிப்பைன்சில் நடைபெறும் 19வது பன்னாட்டுத் திருச்சபைத் தலைவர்கள் கருத்தரங்கிற்குத் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக இளையோர் அமைப்புத் தலைவர் ஒருவர் கூறினார்.
2012ம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 15 வரை பிலிப்பைன்சின் Kalibo மறைமாவட்டத்தில் நடைபெறும் 19வது பன்னாட்டுத் தலைவர்கள் கருத்தரங்கில், ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொதுநிலை விசுவாசிகள் என சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் 2013ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி வரை திருச்சபையில் விசுவாச ஆண்டு கடைப்பிடிக்கப்படும் வேளை, இளையோரும் பெற்றோரும் இயேசு கிறிஸ்துவை அனுபவிக்க இந்தக் கருத்தரங்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார், “கிறிஸ்துவுக்காக இளையோர்” என்ற அனைத்துலக அமைப்பின்(YFC) தலைவர் Eren Lyle Villegas.
“Greeneration” என்ற பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பின் திட்டத்தோடு சேர்ந்து இக்கருத்தரங்கில் கலந்து கொள்வோர் மரங்களை நடுவார்கள் மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று Villegas கூறினார்.







All the contents on this site are copyrighted ©.