2011-11-10 16:18:27

ஜப்பானில் அணுமின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட ஆயர்கள் வலியுறுத்தல்


நவ.10,2011. ஜப்பானில் அணுமின் உற்பத்தித் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாக அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
“இப்போதே அணுமின் உற்பத்தியை நிறுத்துக” என்ற தலைப்பில் “ஜப்பானில் வாழும் எல்லாருக்குமென” என்று தங்கள் செய்தியை வெளியிட்டுள்ள ஆயர்கள், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பேராபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு மின்சக்தியைத் தயாரிப்பதற்கு வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.,
ஜப்பானில் தற்போது 54 அணுமின் நிலையங்கள் இருக்கின்றன எனவும், ஃபுக்குஷிமா போன்று மற்றொரு பெரிய விபத்தின் ஆபத்தை இந்த நிலையங்களில் ஒன்று கொண்டிருக்கின்றது என அறிய வருவதாகவும் ஜப்பான் ஆயர்களின் அறிக்கை எச்சரிக்கின்றது.
ஜப்பானுக்கென ஒரு கலாச்சாரம், தேசிய ஞானம் மற்றும் இயற்கையோடு நல்லிணக்கத்தோடு வாழும் மரபு இருக்கின்றன என்றும் கூறும் ஆயர்கள், புத்தம், ஷிண்டோயிசம் போலவே கிறிஸ்தவமும் மிக நேர்த்தியான எளிமை மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தனர்







All the contents on this site are copyrighted ©.