2011-11-08 14:43:09

2010ல் இந்தியச் சாலை விபத்துகளில் 3.84 லட்சம் பேர் மரணம்


நவ.08,2011. இந்தியாவில் கடந்த ஆண்டு, 3 லட்சத்து 84 ஆயிரத்து 649 பேர், சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
கடந்த 2000ம் ஆண்டில், நாடு முழுவதும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 883 பேர், சாலை விபத்துகளில் பலியானார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை, கடந்த 2010ம் ஆண்டில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த விபத்துகளில், ஆறில் ஒரு பங்கு மகாராஷ்டிராவில் நடந்துள்ளது, இதில் 64 ஆயிரத்து 204 பேர் இறந்துள்ளனர் எனக் கூறும் தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை, இதற்கு அடுத்தபடியாக, பலியானோர் எண்ணிக்கை விகிதத்தில், உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும், தமிழகமும், ஆந்திராவும் இடம் வகிக்கின்றன என்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.