2011-11-05 14:16:54

ஐவரி கோஸ்டில் அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல், ஆயர் கவலை


நவ.05,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் ஆயுதங்கள் பெருமளவில் விநியோகத்தில் உள்ளன என்றும் மோதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அந்நாட்டு Man ஆயர் Gaspard Beby Gnéba எச்சரித்தார்.
ஐவரி கோஸ்டில் பரவலாக, இன்னும் குறிப்பாக லைபீரிய நாட்டு எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி இருப்பதாகவும், அண்மை நாட்களில் இக்கிராமங்களில் இடம் பெற்ற வன்முறையில் நான்கு பேர் இறந்தனர் எனவும் ஆயர் Gnéba கவலை தெரிவித்தார்.
அந்நாட்டில் புரட்சிக் குழுக்கள் வளர்ந்து வருவதாகவும், இக்குழுக்களிடமிருந்து துப்பாக்கிகள் எளிதாக மற்றவர்களுக்குக் கிடைப்பதாகவும், ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார் ஆயர் Gnéba.
ஐவரி கோஸ்ட் நாடு தற்போதுதான் இரத்தம் சிந்தும் மோதல்களிலிருந்து மீண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர், அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் Laurent Gbagbo , பதவி விலக மறுத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கும், தேர்தலில் வெற்றியடைந்த அரசுத் தலைவர் Alassane Ouattara ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டன







All the contents on this site are copyrighted ©.