2011-11-04 15:33:03

திருப்பீட அதிகாரி : எந்தவொரு குழந்தையும் ஆண், பெண் பாகுபாடின்றி நோக்கப்பட வேண்டும்


நவ.04,2011. ஒரு குழந்தை ஆணோ பெண்ணோ அது கடவுளின் கொடை என்ற உணர்வுடன் அக்குழந்தையை ஏற்பதே சிறாரின் உரிமைகள் மீறப்படுவதைத் தடுப்பதற்கு உண்மையான அடித்தளமாகும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
“உலகச் சிறாரும் அவர்களது உரிமைகள் மீறப்படுவதும்” என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் நீதித்துறையின் பேரருட்திரு Charles Scicluna இவ்வாறு கூறினார்.
“சிறாரைப் பாதுகாப்பதற்கு நிறுவனங்களும் சமூகங்களும் என்ன செய்ய வேண்டும், இதில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு என்ன” என்பது குறித்து உரையாற்றிய பேரருட்திரு Scicluna, சிறாரின் மாசற்ற தன்மை பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.