2011-11-04 15:36:31

கடந்த அக்டோபரில் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்தது - ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவிப்பு


நவ.04,2011. கடந்த அக்டோபரில் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்து இருந்தது எனினும், இந்நிலை கடந்த ஆண்டைவிட அதிகம் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
உலகில் அண்மை மாதங்களில் தானியங்களின் விலை குறைந்து வருகின்றது என்றும் 2012ம் ஆண்டிலும் தானியங்களின் விலை தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் FAO கூறியது.
இதற்கிடையே, இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் 12.21 விழுக்காடு அதிகரித்ததாகவும் இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.