2011-11-01 14:51:32

தாய்லாந்திலும் துருக்கியிலும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சபை உதவிகள்


நவ.01,2011. அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டிற்கும் நில அதிர்ச்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ள துருக்கி நாட்டிற்கும் 25,000 டாலர்கள் வீதம் உதவித் தொகை அனுப்ப உள்ளதாக தென்கொரியாவின் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.
Seoul பெருமறைமாவட்டத்தின் பிறரன்பு அமைப்பால் வழங்கப்பட உள்ள இவ்வுதவித் தொகைகள், வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவப் பணிகளுக்கும், நிவாரண உபகரணங்கள் வாங்குவதற்கும் செலவழிக்கப்படும் என்றார் அவ்வமைப்பின் இயக்குனர் குரு ஜோசப் கிம் யாங் தயே.
தாய்லாந்து நாட்டிற்கான உதவிகள் விரைவில் அனுப்பப்பட்டு, காரித்தாஸ் அமைப்பு மூலம் பணிகள் தொடரும் என்று கூறிய கொரியத் திருச்சபை அதிகாரிகள், வெளிநாட்டு உதவிகளை துருக்கி அரசு மறுத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு உதவும் வழிகள் குறித்து சிந்திக்கப்படும் என அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.