2011-10-27 15:57:18

போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கடமை அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் சார்ந்தது - WCC


அக்.27,2011. போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கடமை அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் சார்ந்தது என்று உலகக் கிறிஸ்தவ சபைகளின் அவை கேட்டுக் கொண்டுள்ளது.
மனித உரிமைகளை நிலை நாட்டும் சட்டங்களை ஒவ்வொரு நாடும் அமல் படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அண்மையில் நியூ யார்க் நகரில் கூடிய உலகக் கிறிஸ்தவ அவையின் கூட்டத்தில் இவ்வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
உலகில் எளிய மக்களைப் பலவகையிலும் அச்சுறுத்தும் போர்ச் சூழல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் போர்க்கருவிகளின் பயன்பாட்டை குறைக்கவும், முடிந்தால், முற்றிலும் ஒழிக்கவும் கிறிஸ்தவர்கள் எப்போது உழைக்க வேண்டும் என்று இவ்வுலக அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit கூறினார்.
2012ம் ஆண்டில் உலகின் அனைத்து நாடுகளும் போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பொது உடன்பாட்டை மேற்கொள்ள உலகக் கிறிஸ்தவ சபை தீவிரமான முயற்சிகளில் ஈடுபடும் என்று பொதுச் செயலர் Tveit கூறினார்.








All the contents on this site are copyrighted ©.