2011-10-27 16:15:06

நேர்காணல் மாடத்தட்டுவிளை மக்களின் கண், உடல் தானங்கள் அருட்பணி டொமினிக் கடாச்ச தாஸ் பாகம் 1


அக்27,2011. அன்புள்ளங்களே, அண்மையில் உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில் 28 கோடியே 50 இலட்சம் பேர் பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 கோடியே 90 இலட்சம் பேர் கண்பார்வையற்றவர்கள் மற்றும் 24 கோடியே 60 இலட்சம் பேர் மங்கலான பார்வையைக் கொண்டவர்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர். இந்தியாவில் ஏறக்குறைய ஒரு கோடியே 50 இலட்சம் பேர் கண்பார்வைக் குறைவாலும் இவர்களில் 46 இலட்சம் பேர் விழித்திரைப் பாதிப்பாலும் கஷ்டப்படுகின்றனர். இவ்வாறு பார்வை பாதிக்கப்பட்டோரில் 27 இலட்சத்து 60 ஆயிரம் பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார். அண்மைக் காலமாகத் தமிழகத்தில் இரத்த தானம், உடல்தானம் போன்ற தானங்கள் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், மாடத்தட்டுவிளை பங்குக்குரு அருட்பணி டோமினிக் கடாச்ச தாஸ், கண்தானம், உடல் தானம் செய்வதற்குத் தனது பங்கு மக்களை ஊக்குவித்து வருகிறார். இப்பங்கில், கடந்த மூன்று ஆண்டுகளில் 69 பேர் கண்தானம் செய்துள்ளனர், இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் கண்தானம் மற்றும் 13 பேர் உடல்தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளனர். ஒருவர் உடல் தானம் செய்துள்ளார். அருட்பணி டோமினிக் கடாச்ச தாஸ் அவர்களின் இந்த நற்பணி பற்றி அறிவதற்கு அவரைத் தொலைபேசியில் அழைத்தோம். தந்தை டோமினிக் கடாச்ச தாஸ் குழுவினர் பேசுகின்றனர். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.