அயோத்தியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடிய திபாவளி
அக்.27,2011. மதக்கலவரங்களால் பலவழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்த அயோத்தியில் திபாவளி
விழாவை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இப்புதனன்று இணைந்து கொண்டாடினர். கலைநயம் மிக்க
பல மலர் மாலைகளை இஸ்லாமியர்கள் உருவாக்கி, இந்து தெய்வங்களுக்கு அளித்தனர் என்று UCAN
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. பல தலைமுறைகளாய் மலர் மாலைகள் செய்யும் பணியில்
ஈடுபட்டுள்ள நாங்கள் எப்போதும் இந்து மதத்தினருடன் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்து வருகிறோம்
என்று மலர்மாலைகளை உருவாக்கும் Rafeeq கூறினார். எங்கள் குடும்பத்தினர் கடந்த 300
ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்து வருகிறோம்; இந்து நண்பர்கள் பலர் எங்கள் மீது நல்ல மதிப்பு
கொண்டுள்ளனர். அயோத்தியாவில் வாழும் எங்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இருந்ததில்லை
என்று Zhora Khatoon என்ற மற்றொரு இஸ்லாம் பெண்மணி கூறினார்.