2011-10-25 16:02:21

பங்களாதேஷ் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் வாய்ப்பு


அக்.25,2011. பங்களாதேஷில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்களாதேஷின் நான்கு அமைச்சர்கள் அறிவித்தனர்.
பங்களாதேஷின் கல்வி, நல ஆதரவு, சமூக பொருளாதார மற்றும் ஒழுக்க ரீதி முன்னேற்றத்திலும் 1971ன் விடுதலைப்போரிலும் அந்நாட்டு கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை ஒரு நாளும் நாம் மறக்க முடியாது என்றார் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கலாச்சாரத்துறை அமைச்சர் Promod Mankin.
இயேசு உயிர்ப்பு ஞாயிறை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தல், பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கிறிஸ்தவர்களுக்குரிய பங்கை அளித்தல், நில உரிமைமாற்றுச் சட்டத்தில் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை அகற்றல் என்பவை உட்பட 10 கோரிக்கைகளை இக்கூட்டத்தின்போது பங்களாதேஷ் கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் நிர்மல் ரொசாரியோ, அந்நாட்டு உள்துறை அமைச்சர் Shamsul Haque Tuku மற்றும் மத நடவடிக்கைகளுக்கான அமைச்சர் Shahjahan Miahஇடம் சமர்ப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.