2011-10-25 16:06:10

அக்டோபர் 26 - வாழ்ந்தவர் வழியில் பேரரசர் ஆல்ஃபிரட்


பேரரசர் ஆல்ஃபிரட் (Alfred the Great) 871லிருந்து 899வரை Wessex அரசராக இருந்தவர். இவர் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் மாநிலத்தில் Wessex அரசருக்கும் அவரது முதல் மனைவிக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர்.
ஆங்கில சாக்ஸன் வரலாற்றின்படி (Anglo Saxon Chronicle) ஆல்ஃபிரட் ஐந்து வயதில் உரோம் நகருக்கு அனுப்பப்பட்டு திருத்தந்தை நான்காம் லியோவால் அரசராக முடிசூட்டப்பட்டார். பிற்காலத்தில் இவர் வெற்றி பெற்று அரியணையில் அமர்வார் என்பதன் ஓர் முன்னடையாளமே இது என ஆங்கில எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
Alfredக்கு நூறு ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த உரோமானியப் பேரரசர் Charlemagne கொண்டு வந்த சமுதாய மாற்றங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, இவர் கல்வி முறையில் பல மாற்றங்களை மேற்கொண்டார். திருத்தந்தை பெரிய கிரெகொரி ஆற்றிய பணிகள், புனித அகஸ்தின் எழுதிய Soliloquies என்ற நூல், மற்றும் முதல் ஐம்பது திருப்பாடல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் இவரே மொழிபெயர்த்தார்.
வைக்கிங் படைகளுக்கு எதிராக தெற்கு இங்கிலாந்தின் Anglo Saxon அரசை பாதுகாத்ததால் Alfred the Great அதாவது, "பேரரசர்" என்ற அடைமொழி ஆல்ஃபிரட்டுக்கு வழங்கப்பட்டது. இன்று வரை ஆங்கிலேய அரசர்களில் இவர் ஒருவருக்கு மட்டுமே "பேரரசர்" என்ற இந்த அடைமொழி உண்டு. அறிவாளியாக விளங்கிய ஆல்ஃபிரட் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அதிகாரப்பூர்வமாக கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராக அறிவிக்கப்படவில்லையெனினும், பல கத்தோலிக்கர்கள் இவரைப் புனிதராக கருதுகின்றனர். இங்கிலாந்து ஆலயக் கண்ணாடிகளில் இவரது உருவம் வரையப்பட்டிருக்கிறது. பேரரசர் ஆல்ஃபிரட் 899ம் ஆண்டு அக்டோபர் 26ம் நாள் காலமானார். ஆங்கிலிக்கன் சபையினர் இவர் இறந்த நாளன்று இவரை நினைவுகூர்ந்து வணங்குகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.