2011-10-22 14:56:40

பெங்களூரில் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு


அக்.22,2011. பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை, திருப்பீட கலாச்சார அவை பெங்களூரில் இம்மாதம் 25 முதல் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
“உறுதியான உலகளாவியப் பொருளாதார அமைப்பு : சந்தைப் பொருளாதாரத்தில் அதன் வெளிப்பாடு” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை கர்நாடக மாநில முதலமைச்சர் வி.சதானந்த் கவுடாவும் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோவும் தொடங்கி வைக்கின்றனர்.
ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதில் பரவலாக அறியப்படும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்ட்ர் சந்தோஷ் ஹெக்டே நிறைவு உரை வழங்குவார்.
இந்தியாவின் உறுதியான சனநாயகம், அதன் வளமையான கலாச்சாரப் பாரம்பரியம், பன்மைக் கலாச்சார, பல்சமயச் சூழல் போன்றவற்றின் அடிப்படையில் இக்கருத்தரங்கு இந்தியாவில் நடைபெறுவதாக திருப்பீட கலாச்சார அவை கூறியது







All the contents on this site are copyrighted ©.