2011-10-21 15:59:28

மியான்மார் இராணுவம் குடிமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிமைக் குழுக்கள் அழைப்பு


அக்.21,2011. மியான்மாரில் குடிமக்கள் மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு மனித உரிமைக் குழுக்கள் அந்நாட்டுத் தலைவர் தெய்ன் செயினுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மியான்மார் அரசுப் படைவீரர்கள், கச்சின் மாநிலத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தைத் தாக்கி, அவ்வாலயத்தில் இருந்த மக்கள் மீது சுட்டனர் எனவும், பங்குக்குருவின் உதவியாளரை துப்பாக்கி முனையால் அடித்துள்ளனர் எனவும் சமய உரிமைக்கான அமைப்பு ஒன்று கூறியது.
உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாடு (CSW) என்ற சமய உரிமைக்கான அமைப்பின் அறிக்கையின்படி, படைவீரர்கள் 19 வயது இளைஞன் ஒருவனையும் ஒரு விவசாயியையும் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தெரிகிறது.
இச்சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள CSW அமைப்பு, மியான்மாரில் குடிமக்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுமாறு அரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.